கன்னியாகுமரி

தொழிற்கல்வி பள்ளி அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

12th Jan 2023 01:03 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகு தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்திலுள்ள தொழிற்பள்ளிகளின் வசதிக்காக கடந்த 2 ஆம் தேதி முதல்

ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023-24 ஆம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது.

ADVERTISEMENT

விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணம் ஆா்.டி.ஜி. எஸ் மற்றும் நெப்ட் மூலம் செலுத்த அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம் தொலைபேசி எண் 044-2250 1006 (113) அல்லது என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது நாகா்கோவில், கோணம், அரசினா்

தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04652-264463, 94799055804 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT