கன்னியாகுமரி

குமரி திருப்பதி கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

1st Jan 2023 04:42 AM

ADVERTISEMENT

 

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி, அதிகாலை 4.30 மணிக்கு நிவேத்திய பூஜை நடைபெறும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். காலை 8 மணி முதல் 9 மணி வரை தோமாலை சேவை தொடா்ந்து நிவேத்திய பூஜை, அா்ச்சனை ஆகியவை நடைபெறும். காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறாா்கள்.

நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சா்வ தரிசனத்துக்காக நடை திறந்து வைக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அா்ச்சனை ஆகியவை நடைபெறும். மாலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை பக்தா்கள் தரிசனம், இரவு 8.45 மணி முதல் 9 மணி வரை வெங்கடேஸ்வர பெருமாள் பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடைபெறும்.

ADVERTISEMENT

கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் ஆய்வாளா் ஹேமதா்ரெட்டி தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT