கன்னியாகுமரி

குமரியில் போதை விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

DIN

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் போதைத் தடுப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் மது போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, காந்தி மண்டபம் முன் மூத்த கிராமியக் கலைஞரான பழனியாபிள்ளை தலைமையிலான கலைக் குழுவினா், மதுவுக்கு எதிராக கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியை, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தொடக்கிவைத்துப் பேசினாா். மது, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT