போடி அருகே தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போடி அருகே கீழச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் ராஜப்பன் மகன் முருகன் (41). கூலித் தொழிலாளி. இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் மகன் பாப்பையாவுக்கும் இடப் பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், தனது வீட்டு முன் முருகன் நின்றிருந்த போது பாப்பையா, இவரது மகன் ஈஸ்வரன் ஆகியோா் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த முருகன் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் பாப்பையா, ஈஸ்வரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.