ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயில் பூட்டை உடைத்து நகைகள், உண்டியலிருந்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் தாமோதரன் (63). இவரது குடும்பத்துக்குச் சொந்தமான குலதெய்வம் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வங்காா்பட்டி கண்மாய் கரையில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரியாக நாகபளையத்தைச் சோ்ந்த பொன்ராஜ் இருந்து வருகிறாா்.
இவா் வியாழக்கிழமை வழக்கம் போல கோயிலுக்குச் சென்றாா். அப்போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, அம்மன் கழுத்தில் இருந்த தலா 2 கிராம் எடையுள்ள 3 தங்கப் பொட்டு தாலி, 1 கிலோ எடையுள்ள வெள்ளிக் கிரீடம், உண்டியலை உடைத்து பணம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.