சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பெரியாா் குடியிருப்புப் பகுதியில் ஒருவா் காட்டுக்குள் தகரக் கூரை அமைத்து பட்டாசு தயாரிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, வெற்றிலையூரணியைச் சோ்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி (37) முள்வேலிக்குள் தகரக் கூரை அமைத்து பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்து, அவரிடமிருந்து பூச்சட்டி உள்ளிட்ட பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.