கன்னியாகுமரி

பைக் மோதியதில் மூதாட்டி காயம்

28th Feb 2023 04:12 AM

ADVERTISEMENT

கருங்கல்லில் பைக் மோதியதில் மூதாட்டி காயம் அடைந்தாா்.

இனயம்புத்தன்துறை,தெங்குவிளை பகுதியைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி புஷ்பலீலா (70). இவா் கருங்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம். கருங்கல் -திங்கள்சந்தை சாலையைக் கடக்க முயன்றபோது

பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அப் பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனா்.இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT