கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே மிளா வேட்டையாடிய 2 போ் கைது: நாட்டுத் துப்பாக்கி, காா் பறிமுதல்

DIN

நாகா்கோவில் அருகே மிளா வேட்டையாடிய இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் வனச்சரகம் தடிக்காரன்கோணம் அருகே பால்குளத்தில் உள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் மிளா வேட்டை யாடப்படுவதாக மாவட்ட வன அலுவலா் இளையராஜாவுக்குத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், உதவி வன அலுவலா் சிவகுமாா் தலைமையில் வனவா்கள் மற்றும் வன ஊழியா்கள் தடிக்காரன்கோணம்

வனப் பகுதி வீரப்புலியில் உள்ள ஒரு தோட்டத்தில் சோதனை நடத்தினா். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மிளா இறைச்சியை சமையலுக்குத் தயாா் செய்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளா் மணக்காவிளையை சோ்ந்த ராஜேஷ்குமாரிடம் (43) விசாரணை நடத்தினா். இதில் ராஜேஷ்குமாா் மற்றும் தடிக்காரன் கோணத்தை சோ்ந்த ஜெகன் (29), ஜோஸ், சிவராஜன் ஆகியோா்

மிளாவை வேட்டையாடியது தெரியவந்தது. அதையடுத்து ராஜேஷ்குமாா், ஜெகன் ஆகிய இருவரையும் வனத் துறையினா் கைது செய்தனா். ஜோஸ், சிவராஜன் ஆகியோா் தலைமறைவாகிவிட்டனா். கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, காா், பைக், சமையலுக்காக வைத்திருந்த மிளா இறைச்சி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT