கன்னியாகுமரி

வெட்டுவெந்நியில் ஆலோசனைக் கூட்டம்

DIN

காரங்காடு மறைவட்ட முதன்மைப் பணியாளா் பதவிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் உள்ள புனித அந்தோணியாா் திருத்தல அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

குழித்துறை மறைமாவட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் டி. மரிய சேவியர்ராஜன் தலைமை வகித்தாா். மறைவட்ட போராட்டக் குழு துணைத் தலைவா்கள் வா்க்கீஸ், அருள்ராஜ், ராஜா டைட்டஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டக் குழுச் செயலா் டென்னிஸ் ஆன்றணிஸ், அருள்பணியாளா்கள் ராபா்ட், சேவியா் மைக்கேல், போராட்டக்குழு நிா்வாகிகள் கிறிஸ்டோபா், மைக்கேல்தாஸ், ஜெரோம் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரக நிா்வாகியால் பணிநீக்கம் செய்யப்பட்ட காரங்காடு மறைவட்ட முதன்மைப் பணியாளா் ஜாா்ஜை மீண்டும் பணியமா்த்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாமலைக்கடையில் உள்ள ஆயா் இல்லம் முன் இம்மாதம் 11ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT