கன்னியாகுமரி

உலகத் தமிழின ஆன்மிக அரசியல் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு

7th Feb 2023 12:51 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் உலகத் தமிழின ஆன்மிக அரசியல் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என அதன் தலைவா் ரவீந்திரா கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின்னா் அவா் கூறியது:

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் வந்தால் மட்டுமே தமிழனின் பண்பாடு, கலாசாரம் காப்பாற்றப்படும். கடந்த தோ்தலில் மத்தியில் பாஜகவுக்கும், மாநிலத்தில் அதிமுகவுக்கும் ஆதரவளித்தோம். இதனடிப்படையில் பிப். 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தோ்தலில் தமிழகத்தின் வளா்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அரணாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு உலகத் தமிழின ஆன்மிக அரசியல் இயக்கம் ஆதரவு அளிக்கும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, உசிலம்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவசி உடனிருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT