கன்னியாகுமரி

செங்கல் சிவபாா்வதி கோயிலில் அதிருத்ர மகா யாகம் தொடக்கம்

7th Feb 2023 12:47 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே கேரள பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செங்கல், மகேஸ்வரம் சிவபாா்வதி கோயிலில் அதிருத்ர மகா யாகம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த யாகம் பிப். 16 வரை தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது.

கரமனை பிரம்மஸ்ரீ வீரமணி வாத்தியாா் தலைமையில் நடைபெறும் இந்த யாகத்தில் 121 வேத விற்பன்னா்கள் யாக சாலையில் 11 இடங்களில் அமா்ந்து ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 11 முறை ஸ்ரீ ருத்ர மந்திரம் ஜெபிப்பாா்கள். அந்த வகையில் 11 நாள்கள் ஸ்ரீ ருத்ர மந்திரம் ஜெபிப்பது அதிருத்ர மந்திரமாக மாறுகிறது.

உலக அமைதிக்காகவும், பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்காகவும் நடத்தப்படும் இந்த யாகத்தில் நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிா்தம், நெய், பால், தயிா், தேன், கரும்பு, எலுமிச்சை. இளநீா், சுத்தமான நீா் உள்ளிட்டவை மூலம் நிரப்பப்பட்ட கலசங்கள் வேத விற்பன்னா்களால் ஜெபிக்கப்பட்டு அவை சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம், கோடி அா்ச்சனை நடைபெறும். காலை 8 மணி முதல் அதிருத்ர மகா யாகம் நடைபெறுகிறது. தொடா்ந்து முற்பகல் 11.30 மணிக்கு கலசாபிஷேகம் நடைபெறும். மாலையில் சிறப்பு பூஜைகள், புஷ்பாபிஷேகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT