கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தொழிலாளி மரணம்:போலீஸாா் விசாரணை

7th Feb 2023 12:48 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகேயுள்ள ஆயினி விளை பகுதியில் கூலித் தொழிலாளி திடீரென உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆயினிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (61). இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதனால், உறவினா்கள் அவரை வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முறையாக சி கிச்சை அளிக்கவில்லை எனக் கூறி குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ரவீந்திரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT