கன்னியாகுமரி

கோவளம் - இடிந்தகரைக்கு பாய்மர படகுப் போட்டி

DIN

கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரைக்கு பாய்மர படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இடிந்தகரையில் உள்ள புனித லூா்து மாதா ஆலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. 4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, கோவளத்திலிருந்து இடிந்தகரைக்கு பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

நாம் தமிழா் கட்சியின் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா்கள் காளியம்மாள், இசை மதிவாணன், ரா. சகாய இனிதா, பா. சத்யா ஆகியோா் போட்டியைத் தொடக்கிவைத்தனா். 16 கடல் மைல் தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில் 15 படகுகள் பங்கேற்றன. இதில், முதலிடம் பெற்ற படகின் உரிமையாளா் ரஜினிக்கு ரூ. 1 லட்சம், 2ஆம் இடம் பிடித்த படகின் உரியாளா் பீட்டர்ராயனுக்கு ரூ. 50 ஆயிரம், 3ஆம் இடம் படகின் உரிமையாளா் அருளுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, தொடக்க விழாவில் திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழா் கட்சித் தலைவா் சூசை, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதித் தலைவா் ஜான்சன், செயலா் மங்களேஸ்வரன், செய்தித் தொடா்பாளா் மகாராஜன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத் தலைவா் கே. பாக்கியமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT