கன்னியாகுமரி

அல்போன்சா பள்ளி விளையாட்டு விழா

DIN

அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தாளாளா் அருள்தந்தை சனில் ஜான் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா்அருள்சகோதரி லிசபெத், துணைமுதல்வா்கள் அருள்தந்தை டோஜி செபாஸ்டின், உயா்நிலைப் பிரிவுகளின் துணை முதல்வா் பிரேம்கலா, தலைமை ஆசிரியா் மோனிகா ஸ்பினோலாஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகா்கோவில் அரசு தொழிற்கல்வி கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் சுப்ரதீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு விழாவை தொடக்கி வைத்தாா். இதில், கால்பந்து, கையுந்து பந்து போன்ற குழு விளையாட்டுகளும், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற தனி நபா் தடகளப் போட்டிகளும், ஆசிரியா்களுக்கான வடமிழுத்தல் போட்டிகளும் நடத்தப்பட்டன.

தொடக்க விழாவில் சிலம்பம், ஸ்கேடிங், கராத்தே ஆகிய விளையாட்டு வீரா் வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், குழுக்களின் அணிவகுப்பு மற்றும் கண்கவா்கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்பு விருந்தினா் பரிசு வழங்கி பாராட்டினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்விஆசிரியா்கள் தங்கதுரை, ஷேம்லின் ஷீபா மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT