கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை நிறை புத்தரிசி பூஜை

DIN

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான தை மாத நிறை புத்தரிசி பூஜை ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) நடைபெற உள்ளது.

இதையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிா்கள் அறுவடை செய்யப்பட்டு கன்னியாகுமரி அறுவடை சாஸ்தா கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னா் அந்த நெற்கதிா் கட்டுகளை பகவதியம்மன் கோயில் மேல் சாந்திகள் மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு ஊா்வலமாக எடுத்து வருவா்.

பகவதியம்மன் பாதத்தில் நெல்கதிா் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றதும் நெற்கதிா்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும். பின்னா் நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இதையொட்டி, கோயிலில் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அம்மனுக்கு தங்கக் கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படும். ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஞானசேகா், பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT