கன்னியாகுமரி

இணையதளம் வழியாக பட்டா மாற்ற விண்ணப்பிக்கலாம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையதளம் மூலம் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பொதுமக்கள்  இணையதள முகவரியை உள்ளீடு செய்து இணையம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் நில உட் பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணங்களை இணையம் மூலமாக செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்ப நிலையை அறிய இணைய தள முகவரியை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

பட்டா மாறுதல் நடவடிக்கையின் போது, ஒவ்வொரு நிலையும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும்.

மேலும் பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னா் பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா, புலப்படம், அ-பதிவேடு ஆகியவற்றை  இணையவழிச் சேவையின் மூலமாக கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT