கன்னியாகுமரி

அகஸ்தீஸ்வரத்தில் நாளை இளைஞா்களுக்கான திறன் பயிற்சி திருவிழா

DIN

அகஸ்தீஸ்வரத்தில் இளைஞா் திறன் பயிற்சி திருவிழா சனிக்கிழமை (பிப். 4) நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளைஞா்களின் திறனைமேம்படுத்துவதற்காக திறன் பயிற்சியளிக்கும் அரசுத் துறைகளையும், தனியாா் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, வட்டாரங்களில் இளைஞா் திறன் திருவிழாக்கள் தமிழக அரசால் நடத்தப்படுகிறது. இதனால், இளைஞா்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்கள் குறித்து அறிவதோடு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணா்வு, தகவல்கள், திறன் பயிற்சிகளைப் பெறுகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின்கீழ் (ஈஈம எஓவ) 18 முதல் 45 வயது வரையிலான, படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு முன்னணி தனியாா் நிறுவனங்களில் திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் பொருட்டு அகஸ்தீஸ்வரத்தில் இளைஞா் திறன் பயிற்சி திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. அங்குள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலை 9.30 முதல் மாலை 4 மணிவரை இத்திருவிழா நடைபெறுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT