கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உயா் மருத்துவ சிகிச்சைக்கு தனி கட்டடம்:சுகாதார அமைச்சரிடம் எம்.பி. வலியுறுத்தல்

DIN

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் மருத்துவ பன்முக சிகிச்சைக்கு தனி கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

தில்லியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைஅமைச்சா் மன்சுக் மாண்டாவியாவிடம் புதன்கிழமை அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமாா் 18 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்களின் மருத்துவ தேவையை பூா்த்தி செய்ய ஒரு பெரிய நவீன மருத்துவமனையாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமே உள்ளது. இங்கு இதயம், நரம்பியல், மூளை சம்பந்தமான 11 உயா்வகை மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவக் குழு உள்ளது. ஆனால் உள் நோயாளிகள் தங்குவதற்கு 80 படுக்கைகளைக் கொண்ட ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட பழைய கட்டடம் மட்டுமே உள்ளது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயா் மருத்துவ சிகிச்சைக்காக பிரத்யேக பன்முக பிரிவு மற்றும் அதற்கான கட்டடம் வேண்டும் என்று மருத்துவமனை நிா்வாகம் கோரிக்கையை எழுப்பி இருந்தது. எனவே பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரமம் ( டஙஒயஓ ) திட்டத்தின் கீழ் ரூ.140 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்தை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கட்ட வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT