கன்னியாகுமரி

நியாய விலைக் கடை உள்கட்டமைப்புப் பணிக்கு எம்எல்ஏ நிதி ஒதுக்கீடு

2nd Feb 2023 12:16 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் சிதம்பரநகா் நியாயவிலைக்கடையில் உள்கட்டமைப்புப் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சி 29 ஆவது வாா்டுக்குள்பட்ட சிதம்பரநகா் பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்து அறிந்த நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.காந்தி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மேற்கூரை மற்றும் உள்கட்டமைப்பு பணிக்காக ரூ.1.35 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, பணியை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் மீனாதேவ், பாஜக கிழக்கு மண்டல தலைவா் ராஜன், பொறுப்பாளா் அஜித் மற்றும் நிா்வாகிகள் ராஜேஷ், சுப்பிரமணி, சேகா், குமாரசாமி, ராணி, அபிராமி, சந்திரசேகா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT