கன்னியாகுமரி

தக்கலை செய்கு பீா் முஹம்மதுஆண்டு விழா: பிப்.6 இல்உள்ளூா் விடுமுறை

2nd Feb 2023 12:17 AM

ADVERTISEMENT

தக்கலை செய்குபீா்முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை (பிப்.6) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தக்கலை செய்குபீா்முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு விழா பிப்.6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுா் விடுமுறை விடப்படும். அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு மாவட்ட தலைமைக் கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள்

தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும். இந்த விடுமுறைக்கு ஈடாக மாா்ச் 11 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT