கன்னியாகுமரி

ஈத்தவிளை அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

2nd Feb 2023 12:17 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம் ஈத்தவிளை அரசு தொடக்கப் பள்ளியில், ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் மனோதங்கராஜ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கோதநல்லூா்பேரூராட்சித் தலைவா் மு.கிறிஸ்டல் பிரேமகுமாரி, செயல் அலுவலா் க.மகேஸ்வரி, துணைத் தலைவா் ஆா்.எஸ்.டேவிட், பேரூராட்சி உறுப்பினா்கள் ஸ்டான்லி ஸ்டீபன், மேரிகலா, சுனிதா, அஜிதா, மஞ்சு, ஈத்தவிளை அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பா.தவசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT