கன்னியாகுமரி

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பூஜை நேரம் மாற்றம்

2nd Feb 2023 12:16 AM

ADVERTISEMENT

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழாவையொட்டி மராமத்து பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வெள்ளிக்கிழமை(பிப்.3 ) முதல் பிப். 20 ஆம் தேதி வரை பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இக் கோயிலில் நிகழாண்டு தூக்கத் திருவிழா மாா்ச் 16 ஆம் தேதி தொடங்குகிறது. வரலாற்று சிறப்பு மிக்க தூக்க நோ்ச்சை மாா்ச் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் உள்ள அம்மன் திருமுடியில் வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளதால் பிப். 3 முதல் பிப். 20ஆம் தேதி வரை மதியபூஜை 10 மணிக்கு நடத்தப்பட்டு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பின்னா் மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என கோயில் செயலா் மோகன்குமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT