கன்னியாகுமரி

குளச்சல் கடற்கரையில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

DIN

குளச்சில் கடற்கரையில், திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

திருவிதாங்கோடு முதல் குளச்சல் கடற்கரை வரை இம்மாணவா்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். பின்னா், கடற்கரையில் முகாமிட்டு, பிளாஸ்டிக் பொருள்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

கல்லூரித் தாளாளா் எச். முகம்மது அலி தலைமை வகித்தாா். இப்பணியை நகா்மன்றத் தலைவா் அ. நஸீா் தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் எட்வின் ஷீலா, துணை முதல்வா்கள் ஏ. முகம்மது சித்திக், எம். ஜெகதீஷ், பேராசிரியா் ரெஜூலின் ஜெயின்குமாா், குளச்சல் நகா்மன்ற உறுப்பினா் அன்வா் சதாத், காதா்மைதீன் ஆகியோா் பங்கேற்றனா்.

பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றும் பணி நிறைவடைந்ததும் மாணவா்கள் ‘நெகிழியில்லா பூமி, ஆரோக்கியமான உலகம்’ என்னும் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT