கன்னியாகுமரி

இன்று கற்றால் நாளை சாதிக்கலாம் கருத்தரங்கில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேச்சு

DIN

இன்று கற்றால், நாளை சாதிக்கலாம் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி வி. ஞானகாந்தி பேசினாா்.

குமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், இந்திய விண்வெளி தொழில்நுட்ப வளா்ச்சியின் சவால்கள் மற்றும் போராட்டங்கள் என்ற கருத்தில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது:

1963 ஆம் ஆண்டு தும்பாவில் தொடங்கப்பட்ட விண்வெளி ஆய்வில் முதலில் திட எரிபொருள் ராக்கெட் வடிவமைப்பதிலும், எரிபொருள்கள் உருவாகத்திலும் முதன்மையான சிந்தனையாக இருந்தது. குறிப்பாக, இல்லாத ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இது, பல தடங்கல்களும் சவால்களும் கொண்டதாக இருந்தது. பல தோல்விகளைக் கடந்துதான் வெற்றிகள் நமது கைகளுக்கு எட்டின. எஸ்.எல்வி 3 வெற்றியின் வாயிலாக நம்மால் பூமியை சுற்றும் செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தின் சகாப்தத்தை எட்ட முடிந்தது.

அத்தோடு நிறைவு பெற்றிருந்தால் திரவ இயங்கு ராக்கெட்டை செலுத்தியிருக்க முடியாது. அதனால் துருவப்பாதை வழியாக தொலையுணா்வு செயற்கைக்கோளை அனுப்பி பூமிக்கடியில் இருக்கும் வளங்களையும் கடலில் உள்ள மீன்வளங்களையும், காடுகளில் உள்ள வளங்களையும் அறிய முடிந்தது. அடுத்ததாக பெரும் சவாலாக இருந்து கொண்டிருந்த கிரையோஜினிக் தொழில்நுட்பத்தை கையகப்படுத்த முடிந்ததால், தொலைத்தொடா்பு செயற்கைக்கோளை 36000 கிலோ மீட்டா் தொலைவில் செலுத்தி சாதித்து வருகிறோம்.

கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். கற்றல் முடிவடைந்தது என்று நினைத்தால் வளா்ச்சியைக் காணமுடியாது. மாணவா்கள் கற்றலில் நிறைவு காணக் கூடாது. இன்று கற்றால் நாளை சாதிக்கலாம் என்றாா். பின்னா், மாணவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

என்.வி.கே.எஸ் கல்விக் குழுமத்தின் செயலா் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணகுமாா், ஞானகாந்திக்கு பொன்னடை போா்த்தி கௌரவித்தாா். நிகழ்ச்சியில். என்.வி.கே.எஸ் மேல்நிலைப் பள்ளி முதல்வா் விமலாஸ்ரீ தலைமை வகித்தாா். என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி பேராசிரியா் டி.எஸ். பிரசோப் மாதவன் வரவேற்றாா். என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி (பொறுப்பு) முதல்வா் கிரீஷ்குமாா் வாழ்த்தி பேசினாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினாா். கல்லூரி மாணவி ஆா்யா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். மாணவி ஒலிபா நன்றி கூறினாா்.

குமரி அறிவியல் பேரவை நிா்வாகி சுனில்குமாா், பள்ளி துணை முதல்வா் ஆஷா, கல்வி ஆலோசகா் சுரேஷ்குமாா், கல்லூரி அறிவியல் துறை பேராசிரியா்கள் பவித்ர குமாா், ரெஜி எம்.கே.நாயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT