கருங்கல் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மூசாரி -பாலூா் இணைப்பு சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இந்த சாலை பழுந்தடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருந்து வருகிறது. மழை காலங்களில் இச்சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் பாதசாரிகள் மிகவும் அவதியுற்று வந்தனா்.இதையடுத்து ஓராண்டுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையின் ஒரு பக்கம் மழைநீரோடை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை சீரமைக்கவில்லை.
இதனால், இந்த சாலையைப் பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். ஆகவே, இச் சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.