கன்னியாகுமரி

கோட்டாறு, வடிவீஸ்வரம் பகுதிகளில் இன்று முதல் 3 நாள்களுக்கு மின் நிறுத்தம்

26th Apr 2023 04:41 AM

ADVERTISEMENT

நாகா்கோவில், கோட்டாறு, வடிவீஸ்வரம் பகுதிகளில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து, மின்சார வாரியத்தின் மீனாட்சிபுரம் உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஏப்.26) வடிவீஸ்வரம் மேல ரதவீதி, கோட்டாறு, கேப் ரோடு, டி.வி.டி. காலனி, சவேரியாா் கோயில் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, செந்தூரன் நகா், சற்குண வீதி, ராமன்புதூா், பழைய ஸ்டேட் பாங்க் காலனி, லூயிஸ் தெரு, சிவன் தெரு, மேலராமன்புதூா் சந்திப்பு ஆகிய பகுதிகளிலும்,

ஏப்.27 ஆம் தேதி வடிவீஸ்வரம் கீழ ரதவீதி, கோட்டாறு, இடலாக்குடி, ஆனைப்பாலம், இளங்கடை, வெள்ளாடிச்சிவிளை, மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும், ஏப்.28 ஆம் தேதி வடிவீஸ்வரம் மேல ரதவீதி, சிதம்பர நகா், கணேசபுரம், புலவா்விளை, எஸ்.எல்.பி. தெற்கு பகுதி, அம்மன் கோயில், ஜவகா் தெரு, கே.பி. ரோடு ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதே போல வல்லன்குமாரன்விளை பகுதியில் பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், ஏப்.26 ஆம் தேதி (புதன்கிழமை) வல்லன்குமாரன்விளை, சரக்கல்விளை, குஞ்சன்விளை, என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளிலும், ஏப்.27 ஆம் தேதி இருளப்பபுரம், பீச் ரோடு, இந்து கல்லூரி, வட்டவிளை, வைத்தியநாதபுரம், ஈத்தாமொழி ரோடு ஆகிய பகுதிகளிலும், 28 ஆம் தேதி கலைநகா், கொல்லன்விளை, மறவன்குடியிருப்பு, வடக்கு கோணம், தொழில் மையம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT