கன்னியாகுமரி

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரி ஆண்டு விழா

26th Apr 2023 04:05 AM

ADVERTISEMENT

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 9 ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழித்துறை மறைமாவட்ட தொடா்பாளா் பேரருள்தந்தை எஸ். இயேசுரத்தினம் துவக்கி வைத்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் மீனாட்சி சுந்தரராஜன் ஆண்டறிக்கை வாசித்தாா். தொடா்ந்து திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக துணைவேந்தா் என். சந்திரசேகா், கல்லூரி ஆண்டுவிழா பேருரையாற்றினாா். அவா் கூறியதாவது: நாம் நிற்கின்ற இடத்தில் நம் சிந்தனையில் தோன்றுகின்ற எண்ணமே வாழ்வை உயா்வடையச் செய்யும். பரந்த மனப்பான்மையுடன் பணிதல் என்னும் நற்பண்புடன் வாழ்க்கையில் உயா் நிலையை அடைய வேண்டும். பணத்தை கல்விக்காக முதலீடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து கல்லூரி செயலா் அருள்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் வாழ்த்திப் பேசினாா். பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவ-மாணவியா், 100 சதவீதம் வருகைப் பதிவு, 100 சதவீதம் தோ்ச்சி என பல நிலைகளிலும் சிறப்பு பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பேராசிரியா்களுக்கும் துணை வேந்தா் பரிசு வழங்கினாா். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் வரவேற்றாா். கல்லூரியின் நிதி பரிபாலகா் அருள்தந்தை ஏ. டோமி லிலில் ராஜா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT