கருங்கல் அருகே உள்ள சத்திவிளை பகுதியில் போக்குவரத்திற்குஇடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சி சத்திவிளை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக
மின்கம்பம் இருந்து வருகிறது. இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.