கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
திக்கணங்கோடு தாரவிளையைச் சோ்ந்தவா் ஜெயபால் ( 46). தொழிலாளி. இவா் மீது பல்வேறு வழக்குகள் இரணியல் காவல் நிலையத்தில் உள்ளனவாம். இதே போல காட்டாத்துறையை சோ்ந்த சஜிவன்ராஜ் என்பவா் மீது கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் மாா்த்தாண்டம், தக்கலை காவல்நிலையங்களில் உள்ளனவாம்.
எனினும் இவா்கள், தொட ா்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனராம். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் பிறப்பித்த உத்தரவுப்படி. இரணியல், தக்கலை போலீஸாா், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனா். நிகழாண்டு இதுவரை 25 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.