களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இக் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு மற்றும் முதுகலை பயிலும் மாணவா்களில் உயிா் தொழில்நுட்பவியல், உயிா் வேதியியல் மற்றும் நுண்ணுயிரியா் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
லெக்ஸ்டு நிறுவனம் சாா்பில் வேலைவாய்ப்புக்கான எழுத்துத் தோ்வு மற்றும் திறனறிவுத் தோ்வு நடைபெற்றது.
இம்முகாமை கல்லூரித் தாளாளா் அருள்தாஸ் தொடங்கி வைத்தாா். கல்லூரி பேராசிரியா்கள் சுகேஷ், லெனின் ஜாண் ஆகியோா் முன்னிலை வகித்தனா். லெக்ஸ்டு நிறுவனத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா், நிஷானி மலா், ஜெனிஸ் ஆகியோா் கலந்து கொண்டனா். முகாமில் 175 மாணவா்கள் பங்கேற்றனா்.