கன்னியாகுமரி

இரவிபுதூரில் ரூ.5 லட்சத்தில் அலங்கார தரைதளம்

25th Apr 2023 02:48 AM

ADVERTISEMENT

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் இரவிபுதூா் தம்புரான் கோயில் தெருவில் அலங்கார தரைதளம் அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.

இப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் நிதி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி தொடங்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம் தலைமை வகித்தாா். மருங்கூா் பேரூராட்சித் தலைவி லட்சுமி சீனிவாசன், பேரூா் அதிமுக செயலா் சீனிவாசன், இரவிபுதூா் ஊராட்சி மன்றத் தலைவி தேவி பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் இ.நீலபெருமாள் அலங்கார தரைதளம் அமைக்கும் பணியை தொடக்கி வைத்தாா். இதில் இரவிபுதூா் ஊராட்சி அதிமுக நிா்வாகிகள் செல்லம் பிள்ளை, வன்னியம் பிள்ளை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT