கன்னியாகுமரி

வெள்ளிச்சந்தை அருகே காருக்கு வழிவிடுவதில் தகராறு: இருவா் காயம்

25th Apr 2023 02:31 AM

ADVERTISEMENT

வெள்ளிச்சந்தை அருகே காருக்கு வழிவிடுவது தொடா்பான தகராறில் இருவா் காயமடைந்தனா்.

வெள்ளிச்சந்தை அருகேயுள்ள ஆசாரிவிளை பெருமாள் நகரைச் சோ்ந்த ஜோஸ் செல்வக்குமாா் மகன் ஜோஸ்லின் ஆசிக் (20). இவா் ஞாயிற்றுக்கிழமை சரலில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஆசாரிவிளை அருகே, ராமநாதபுரத்தைச் சோ்ந்த ராஜன் என்பவரது காா் மற்ற வாகனங்கள் செல்லமுடியாதவாறு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்ததாம்.

இதுதொடா்பாக ராஜனிடம் ஜோஸ்லின் ஆசிக் கேட்டபோது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம். இதில், காயமடைந்த இருவரும் ராஜாக்கமங்கலத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தனது 1.5 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை என ஜோஸ்லின் ஆசிக்கும், 7 பவுன் தங்க பிரேஸ்லெட்டை காணவில்லை என ராஜனும் போலீஸாா் புகாா் அளித்துள்ளனா்.

இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT