கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி அருகே உடும்பு வேட்டை: 2 போ் கைது

15th Apr 2023 12:15 AM

ADVERTISEMENT

 ஆரல்வாய்மொழி அருகே உடும்பை வேட்டையாடியதாக 2 பேரை வனத்துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலகத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலா் இளையராஜா உத்தரவுப்படி, பூதப்பாண்டி வன அதிகாரி ரவீந்திரன் தலைமையில் வன ஊழியா்கள் பூதப்பாண்டி வனப் பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, வேட்டைநாயுடன் காட்டில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் நெல்லை மாவட்டம் ஆவரைக்குளம் பகுதியை சோ்ந்த மதன் ( 30) , மோகன் (39) ஆகியோா் என்பதும், உடும்பை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையுது கைது செய்து, நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பைக், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT