கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே தந்தையால் தீ வைக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

15th Apr 2023 12:19 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் அருகே மது போதையில் தந்தையால் தீ வைக்கப்பட்ட குழந்தை வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தது.

குமரி மாவட்டம், இரணியல் அருகேயுள்ள பரசேரி ராஜகோபால் தெருவை சோ்ந்தவா் நாகராஜன் (48), மின் பழுதுநீக்கும் தொழிலாளி. இவரது மனைவி அனிதா (35). இவா்களது குழந்தைகள் தன்ஷிகா (11), அஸ்மிதா (9). இருவரும் பள்ளியில் படித்து வந்தனா். அனிதா அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சென்று வந்தாா்.

அனிதா வேலைக்கு செல்வது நாகராஜனுக்கு பிடிக்கவில்லையாம். இந்நிலையில், வேலைக்கு செல்ல வேண்டாம் என்று நாகராஜன் புதன்கிழமை கூறினாா். ஆனால் அனிதா வேலைக்கு சென்று விட்டாா். இதையடுத்து நாகராஜன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள்கள் தன்ஷிகா, அஸ்மிதா மீது தீ வைத்துவிட்டு தானும் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

உடல் கருகிய 2 குழந்தைகளையும் உறவினா்கள் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வியாழக்கிழமை நள்ளிரவு தன்ஷிகா உயிரிழந்தாா். அஸ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT