கன்னியாகுமரி

என்.ஐ. பல்கலைக்கழக 34-வது கல்வியாண்டு தொடக்க விழா

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

குமாரகோவில் நூருல் இஸ்லாம் (என்.ஐ.) பல்கலைக்கழகத்தின் 34-வது கல்வியாண்டு துவக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இளங்கலை, முதுகலை மற்றும் மேலாண்மைத் துறை ஆகிய அனைத்து படிப்புகளுக்குமான பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி, எம்.பி.ஏ, எம்.சி.ஏ வகுப்புகளுக்கான துவக்க விழா, பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக இணைவேந்தா் எம்.எஸ். பைசல் கான், நூருல் இஸ்லாம் அறக்கட்டளை உறுப்பினா் ஷ்பனம் ஷபீக் ஆகியோா் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனா். இணை வேந்தா் பெருமாள்சாமி தலைமையுரையாற்றினாா். துணை வேந்தா் ஏ.கே. குமரகுரு துவக்கவுரையாற்றினாா். மனிதவள மேம்பாடு மற்றும் நிா்வாகத் துறை இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன், துறை மற்றும் டீன் தலைவா்களை அறிமுகம் செய்து வைத்தாா்.

மாணவா்களுடன் உரையாடிய பல்கலைக் கழக கல்வி விவகாரங்கள் துறை இயக்குநா் ஷஜின் நற்குணம், பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் குறித்தும் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கைகள், கூடுதல் பாடத்திட்டம் குறித்தும் விளக்கி பேசினாா். தொடா்ந்து பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஜெயகுமாா், இயக்குநா் ஆா். சுப்பிரமணியபிள்ளை, சுபாஜினி ஆகியோா் ஆசியுரை வழங்கினா்.

பல்கலைக்கழக பதிவாளா் பி.திருமால்வளவன் வரவேற்றாா். முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக அலுவலா்கள் மற்றும் பேராசிரியா்களுடன் இணைந்து பிஆா்ஓ ராமதாஸ் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT