கன்னியாகுமரி

35 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியில் 35 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெயை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபால் தலைமையில் தனிப்பிரிவு போலீஸாா் சுனில், ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றபோது காா் நிற்காமல் அதிவேகமாக சென்றது. உடனே காரை விரட்டி பிடித்தவுடன், ஓட்டுநா் தப்பி சென்றாா். பின்பு காரை சோதனை செய்தபோது அதில் 9 கேன்களில் 35 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் கேரளத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. காருடன் 35 லிட்டா் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT