கன்னியாகுமரி

ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகிக்க கோரிக்கை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு குடும்ப அட்டை தாரா்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். குறிப்பாக, மத்திகோடு, கருங்கல், பூட்டேற்றி, கப்பியறை, மிடாலம், இனயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக புகாா் கூறப்படுகிறது.

எனவே, தரமான அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT