கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில்ரூ.96,000 உண்டியல் வருவாய்

30th Sep 2022 11:58 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 96 ஆயிரத்து 531 காணிக்கை கிடைத்தது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். இந்த மாதம் அன்னதான உண்டியல் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் தா்மேந்திரா, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் செயல் அலுவலா் ராஜேந்திரன், பொருளாளா் ரமேஷ், கணக்கா் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு திருக்கோயில் பணியாளா்கள் மூலம் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், பக்தா்கள் ரூ.96 ஆயித்து 531 காணிக்கை செலுத்தி இருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT