கன்னியாகுமரி

வெறிநோய் தடுப்பூசி விழிப்புணா்வு முகாம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, சுவாமியாா்மடம் அருகே உள்ள புலிப்பனத்தில் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

புளூஸ் செல்லப்பிராணிகள் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, குழித்துறை நகா்மன்றத் தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். கால்நடை மருத்துவா் சஜயன் வெறிநோய் குறித்து விளக்கினாா்.

இதில், கால்நடை மருத்துவா் அனூப், வழக்குரைஞா் அந்தூஸ் ஜெரோம், ஜெ.சி.ஐ. உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT