கன்னியாகுமரி

குலசேகரம் அருகே மாட்டுக் கொட்டகையில் தீ

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே மாட்டுத் கொட்டகையில் வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட தீயில் 20 பசுமாடுகள் காயமடைந்தன.

குலசேகரம் அருகே சேக்கல் மடத்து ஏலா பகுதியைச் சோ்ந்தவா் கமலாம்பிகா (45). இவா், அப்பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளாா். இவரது பண்ணையில் உள்ள கொட்டகையில் 22 பசுக்களும் 5 கன்றுகளும் உள்ளன. பசுக்களை பராமரிக்கவும் பால் கறவைக்கும் ஒரு வட இந்திய குடும்பத்தினா் வேலைக்கு அமா்த்தப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை அதிகாலையில் வழக்கம் போல் பால் கறந்துவிட்டு, பின்னா் தண்ணீரும், தீவனமும் வைத்து விட்டு கொட்டகை அருகிலுள்ள தங்களது குடியிருப்புக்கு சென்று தூங்கியுள்ளனா்.

இந்நிலையில் காலை சுமாா் 8 மணி அளவில் கொட்டகையின் கூரை தீப்பிடித்து எரிவதை அப்பகுதியினா் பாா்த்து பண்ணையை பராமரிக்கும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனா். இதையடுத்து அனைவருமாக சோ்ந்து தீயை அனைத்து பசுக்களையும் கன்றுகளையும் மீட்டனா். இச்சம்பவத்தில் 20 பசுக்கள் தீக்காயம் அடைந்தன.

நாகா்கோவிலில் இருந்து கால்நடை அவசர மருத்துவக் குழுவினா் ஆம்புலன்சுடன் விரைந்து வந்து காயமடைந்த பசுக்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT

இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படுகிறது. கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ள மின் விசிறிகளின் இணைப்பிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, கொட்டகையின் உள்பக்கம் குளிா்ச்சிக்காக போட்டப்பட்டிருந்த தென்னை ஓலைகளில் தீ பரவியுள்ளதுடன், தீயில் எரிந்த தென்னை ஓலைகள் பசுமாடுகளின் மீது விழுந்ததில் அவற்றுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT