கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகேரூ. 25 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

30th Sep 2022 11:59 PM

ADVERTISEMENT

நாகா்கோவில் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ரூ. 25 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டது.

நாகா்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் வேதநகா் பகுதியில் ஹவாய் நகா் 9 ஆவது தெருவில் உள்ளது. இதை புத்தளம் பகுதியை சோ்ந்த அன்னக்கிளி என்பவா் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தாா். 3 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்த அன்னக்கிளி அந்த நிலத்தில் விவசாயம் செய்யாமல் தரிசாக விட்டிருந்தாராம்.

இந்நிலையில் அறநிலையத்துறைக்கு அன்னக்கிளி குத்தகை பாக்கி ரூ.17 லட்சம் வைத்திருந்தாா். அதைத் தொடா்ந்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தங்கம் தலைமையில் சிறப்பு வட்டாட்சியா் சஜித், முப்பிடாதி அம்மன் கோயில் செயல் அலுவலா் ரகு,ம் அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் அந்த நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டு, அறிவிப்பு பலகை வைத்தனா். அந்த நிலத்தின் மதிப்பு சுமாா் ரூ.25 கோடி இருக்கும் என தெரிவித்த அதிகாரிகள், இந்நிலத்தை வேறு நபருக்கு குத்தகை விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT