கன்னியாகுமரி

பிஎப்ஐ அமைப்புக்கு தடை: குமரி மாவட்டத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

DIN

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்புக்கு மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்ததை தொடா்ந்து குமரி மாவட்டத்தில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் நிா்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை( என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினா். மேலும் அந்த அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக பிரமுகா்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்நிலையில், பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5ஆண்டுகள் தடை விதித்துள்ளது. மேலும் இந்த அமைப்புடன் தொடா்புடைய 7அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறாா்கள். இஸ்லாமியா்கள் அதிகமாக வாழும் இடலாக்குடி பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் இடலாக்குடி மற்றும் இளங்கடை பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீஸாா் தொடா் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறாா்கள். மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1200 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT