கன்னியாகுமரி

பளுகல் அருகே இளைஞா் தற்கொலை

29th Sep 2022 12:33 AM

ADVERTISEMENT

 

பளுகல் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பளுகல் அருகே கண்ணுமாமூடு, செறுகுரல்காலாய் புத்தன்வீடு பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் பெஞ்சமின் மகன் ரதீஷ் (36). இவருக்கு மனைவி விஜிலா, 2 குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனால் விஜிலா அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. 20 நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டபோது விஜிலா நகை, பணத்துடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றாராம். இதனால் ரதீஷ் மன வருத்தத்தில் இருந்தாராம்.

இந்நிலையில் ரதீஷுக்கு அவரது தாய் வசந்தா புதன்கிழமை மதிய உணவு கொண்டுவந்தாா். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் ரதீஷ் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT