கன்னியாகுமரி

சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்

29th Sep 2022 12:33 AM

ADVERTISEMENT

 

கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக 2019ஆம் ஆண்டு உடைக்கப்பட்ட ஆற்றூா்-அழகியமண்டபம் சாலை 3 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாததைக் கண்டித்தும், சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தியும் திருவட்டாறு கிழக்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் வோ்க்கிளம்பி சந்திப்பில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருவட்டாறு கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஜெகன்ராஜ் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் டாக்டா் பினுலால் சிங் போராட்டத்தைத் தொடக்கிவைத்தாா். வோ்க்கிளம்பி பேரூராட்சித் தலைவா் சுஜிா் ஜெபசிங், குலசேகரம் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் காஸ்ட்டன் கிளிட்டஸ், மாவட்ட துணைத் தலைவா் ஜாண்சேவியா், மாவட்டச் செயலா்கள் ஜான் இக்னேசியஸ், வா்க்கீஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் செலின்மேரி, ஷா்மிளா ஏஞ்சல், ஜோபி உள்ளிட்டோா் பேசினா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா் போராட்டத்தை முடித்துவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT