கன்னியாகுமரி

மாங்கரை-முள்ளங்கனாவிளை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

29th Sep 2022 12:34 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள மாங்கரை -முள்ளங்கனாவிளை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள் பட்டமாங்கரை -முள்ளங்கனாவிளை சாலை கிரமப்புற மக்களுக்கு பயன்பெறும் முக்கிய சாலையாகும். இச்சாலையில் தற்போது குண்டு, குழிகள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, காசிப்பாறை, நல்லான்தறை, இடையன்கோட்டை பகுதிகளில் சாலையின் இருபக்கமும் பழுதடைந்து ராட்சத குண்டு, குழிகள் காணப்படுகிறது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்துக்குளாகி வருகின்றனா். இரவு நேரங்களில் பாதசாரிகள் அச்சத்துடன் செல்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT