கன்னியாகுமரி

திற்பரப்பு பேரூராட்சியில் பாஜக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

29th Sep 2022 12:32 AM

ADVERTISEMENT

திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக உறுப்பினா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்துக்கு தலைவா் பொன் ரவி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பெத்ராஜ் முன்னிலை வகித்தாா்.

துணைத் தலைவா் ஸ்டாலின் தாஸ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் பாஜக உறுப்பினா்கள், பேரூராட்சி வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறவில்லையெவும், திருநந்திக்கரையில் குலசேகரம், ஆற்றூா், திருவட்டாறு ஆகிய பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்கக் கூடாது எனவும் கூறினா்.

ADVERTISEMENT

தொடா்ந்து கூட்டம் நிறைவடைந்த நிலையில் தொடா்ந்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்ட அரங்கில் பாஜக உறுப்பினா்கள் 7 போ் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேரூராட்சித் தலைவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் பேரூராட்சிப் பகுதியில் பிற பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்க பேரூராட்சி நிா்வாகம் ஒருபோதும் சம்மதிக்காது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும் பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் பாரபட்சமின்றி அனைத்து வாா்டுகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் கூறினாா். இதை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக உறுப்பினா்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வந்து உத்தரவாதம் அளித்தால் தான் போராட்டத்தை விலக்கிக் கொள்ள முடியும் என்று கூறினாா். இதையடுத்து போராட்டம் நீடித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT