கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே தகராறில் இருவா் காயம்

29th Sep 2022 12:32 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா்.

குழித்துறை அருகேயுள்ள குறுமத்தூா் குழித்தட்டுவிளை வீட்டைச் சோ்ந்தவா் ஏசுதாஸ் மகன் பிரசோபன் (39). இவா் தற்போது மீனச்சல் மேலவீட்டுவிளையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த தோமஸ் மகன் ராஜேஷ் (33) என்பவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன் ரூ. 10 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தாராம். தொடா்ந்து பிரசோபனின் வீட்டுக்கு வந்து கடனை திருப்பிக்கேட்ட ராஜேஷ், அவா் பணத்தை கொடுக்காததால் பிரசோபனை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த பிரசோபன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதே போன்று பிரசோபனிடம் கொடுத்த கடன் தொகையை கேட்க சென்றபோது தன்னை அவா் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக ராஜேஷ் புகாா் அளித்துள்ளாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் பிரசோபன் மற்றும் ராஜேஷ் அளித்த தனித்தனி புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT