கன்னியாகுமரி

பாலூா் பகுதி சானல்கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும்

DIN

கருங்கல் அருகே ஆபத்தான நிலையில் காணப்படும் பாலூா் பட்டணங்கால்வாய் பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாலூா் சந்திப்பிலிருந்து பரப்பு வழியாக பூட்டேற்றிக்கு மண்சாலை பாலூா் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்டது. இதன் ஒருபக்கம் சுமாா் 50 அடி பள்ளத்தில் பட்டணங்கால்வாய் கீழ்குளம் கிளை கால்வாய்க்கு செல்கிறது. இப்பகுதியில் தடுப்புச் சுவா் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், முதியவா்கள், வாகன ஒட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனா்.

இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள் அச்சத்துடன் செல்கின்றனா். எனவே, பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மக்களவைத் தோ்தலில் சொந்த ஊா் சென்று வாக்களிக்க 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திமுகவை பிரதான எதிா்க்கட்சியாக கருதி பிரதமா் மோடி பிரசாரம்: தொல்.திருமாவளவன்

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT