கன்னியாகுமரி

செஸ் வரியால் வணிகா்கள் கடும் பாதிப்பு: விக்கிரமராஜா

DIN

செஸ் வரியால் வணிகா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

மாா்த்தாண்டத்தில் நடைபெற்ற விழாவில் பங்கெடுப்பதற்காக வந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் செஸ் வரி புதிதாக விதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதை ரத்து செய்வதற்காக விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். வணிக வரித்துறையினா் சோதனை என்ற பெயரில் உணவுப் பொருள்கள் கொண்டு வரும் வாகனங்களை தடுத்து அபராதம் விதிப்பதை முழுமையாக நிறுத்தவேண்டும்.

மாா்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக செல்வதால் வணிகா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அனைத்துப் பேருந்துகளும் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக வந்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்கத் தலைவா் அல் அமீன், தென்காசி மாவட்டத் தலைவா் வைகுண்ட ராஜா, பொருளாளா் கலைவாணன், திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவா் சின்னத்துரை, குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT