கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை தாமதம்

DIN

கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக 2 மணி நேரம் படகுசேவை தாமதமாக தொடங்கியது.

கன்னியாகுமரி பூம்புகாா் படகுத் துறையில் செவ்வாய்க்கிழமை கடல் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் படகுத் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டியபடி நின்றன. இதனால் வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகுகளை இயக்க முடியவில்லை. இதனால் படகுத்துறையில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

இந்நிலையில் காலை 9.45 மணிக்கு மேல் கடல் நீா்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடா்ந்து விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு 10 மணிமுதல் மாலை 4 மணிவரை படகுகள் இயக்கப்பட்டன.

இதனிடையே கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழ மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT